புத்தூர் சிவன் கோவில்[அம்மன்] 4ம் திருவிழா



யாழ்ப்பாணம் – புத்தூர் சிவன் கோவில்(அம்மன்) 4ம் நாள் திருவிழா இன்று 20.07.2017 வியாழக்கிழமை


























































மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

வித்தியா படுகொ​லை விசாரணை ஒத்திவைப்பு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான Trial at Bar  தொடர் விசாரணையின் இரண்டாம் சுற்றின் மூன்றாம் நாள் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.
இதன் பிரகாரம் இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக Trial at Bar  நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பான Trial at Bar  விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தின் 42 ஆம் இலக்க சாட்சியாளரான குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியாகம சிசிர திசேரா இன்று சாட்சியமளித்தார்.
இதனையடுத்து இரண்டாம் சுற்று விசாரணைகள் இன்றுடன் நிறைவுக்கு வந்தன.
25 ஆம் இலக்க சாட்சியான குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வாவின் சாட்சியை நெறிப்படுத்துவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால், அதனை எதிர்வரும் 24 ஆம் திகதி பதிவுசெய்வதற்கு நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
இவரது சாட்சியம் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு Trial at Bar விசாரணைக் குழாம் முன்னிலையில் ஆஜராகுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். ரியாலுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவரை 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு மன்றில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பான Trial at Bar  விசாரணைகள் எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளிலும், ஓகஸ்ட் மாதம் 2, 3, 4 ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்து சமய ஆசி­ரி­யர்கள் இன்­மையால் மாண­வர்கள் இஸ்லாம் கற்கும் நிலை

கண்டி யஹ­ல­தென்ன முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் இந்து, கிறிஸ்­தவ மாண­வர்­க­ளுக்கு சமயம் கற்­பிக்க ஆசி­ரி­யர்கள் இன்­மை­யினால்  
கட்­டாய பாட­மான சமய பாடத்­திற்­காக குறித்த மாண­வர்கள் இஸ்லாம் கற்க வேண்­டிய இக்­கட்­டான நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளார்கள் என்று 
மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஹிதாயத் சத்தார் தெரி­வித்தார். 

மத்­திய மாகாண சபைத் தலைவர் எல்.டி.நிம­ல­சிறி தலை­மையில் 
பல்­லே­க­லையில் அமைந்­துள்ள மத்­திய மாகாண சபை கட்­டி­டத்தில் இடம்பெற்ற மத்­திய மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-

சில மாகா­ணங்­களில் பட்­ட­தாரிகள் தொழில் கேட்டு போராட்டம் 
நடத்­து­கின்­றனர். சில­ரது போராட்­டத்­திற்கு நூறு நாட்­களும் கடந்து விட்­டன.

 ஆனால், மத்­திய மாகா­ணத்தில் இரண்­டா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட தமிழ் ஆசி­ரியர் வெற்­றிடம் காணப்­பட்ட போதும் 721 விண்­ணப்­பங்­களே கிடைத்­தன. இதன் கார­ண­மாக போட்டிப் பரீட்சை இன்றி நேர்முகப் 
பரீ­ட்சை மூலம் தகு­தி­யுள்ள சக­லரும் தெரிவு செய்­யப்­பட்­டனர். ஆனால் அதில் சில குள­று­ப­டிகள் உள்­ளன.

எத்­து­றைக்கு ஆசி­ரியர் தேவை எனக் கரு­தாது நிய­ம­னங்கள் 
வழங்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக எனது ஊரான யஹ­லத்­தென்­னயில் உள்ள முஸ்லிம் மகா­வித்­தி­யா­ல­யத்தில் 20 சத­வீதம் தமிழ் மாண­வர்கள் உள்­ளனர். 

அவர்­க­ளுக்கு சமய பாடம் கட்­டாயம் தேவை. ஆனால் அதனைக் 
கற்­பிக்க ஆசி­ரி­ யர்கள் இல்லை. எனவே, அத்­த­கைய மாண­வர்கள் இஸ்லாம் சமய பாடத்தை படித்து சாதா­ரண தரப் பரீட்சை 
எழு­து­கின்­றனர். அவர்கள் பரீட்­சையில் சித்­தி­ய­டைய இதனைச் 
செய்­தாலும் இது அவர்­க­ளது உரிமை மீற­லாகும். இதற்­கான வாய்ப்பு ஏற்­ப­டுத்த வேண்டும். எனவே, முஸ்லிம் பாட­சா­லை­களில் உள்ள  ஒரு சில தமிழ் மாண­வர்­க­ளது நலன் கருதி இந்து சமய ஆசி­ரி­யர்கள் 
நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றார். 

மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!



மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, இளைஞனொருவன் உயிரிழந்துள்ளான் என, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில், இன்று (20) பிற்பகல்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது 24 வயது மதிக்க தக்க இளைஞனே உயிரிழந்துள்ளான் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு ரயில் மூலமே கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் இதுதொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டனர்.

உயிரிழந்த இளைஞன், சிங்கள இளைஞனாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், சிங்களத்தில் கடிதம் ஒன்றை எழுதிவிட்டே, அவர், ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் எனவும் கூறினர்.

குறித்த இளைஞனின் பை ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பான வேறு எந்த அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமும் அவரிடம் காணப்படவில்லையெனவும் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆறுமுகநாவலரின் ‘கந்தபுராண வசனம்’ நூல் வெளியீடு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் படைத்தருளிய ‘கந்தபுராண வசனம்’ எனும் நூல்    இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) காலை வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்துசமய அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறித்த நூலை வெளியிட்டு வைத்தார்.

சமஸ்கிருதத்திலிருந்து கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கந்தபுராணத்திற்கான எளிமையான உரையாக ஆறுமுகநாவலரால் எழுதப்பட்ட ‘கந்தபுராண வசனம்’ அமைந்துள்ளது. அவருக்குப் பின்னர் ஆறுமுக நாவலர் சபை 1981 ஆம் ஆண்டில் அந்த நூலைப் பதிப்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 35 ஆண்டுகளின் பின்னர் சைவப்பிரகாச பதிப்பகத்தின் முயற்சியால் இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களத்தால் இந்த நூல் பதிப்பித்து இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்வில்,சின்மய மிஷன் சைதன்ய சுவாமிகள், நல்லூர் ஆதீன குருமுதல்வர் சேமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானத் தலைவர் ஆறு.திருமுருகன் உட்பட சமயப் பெரியார்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான இராவணன் தொடர்பான பல ஆதாரங்கள் பிரித்தானியாவில்

இராவணன் தொடர்பில் இலங்கையில் இல்லாத பல சாட்சிகள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இராவணன் வரலாறு தொடர்பில் இலங்கையிலுள்ள சில கடும்போக்குவாதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், பிரித்தானியாவில் இதனை உறுதி செய்யும் வகையில் பல சாட்சிகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பிலான ஆதாரங்கள் பிரித்தானியாவின் பிலெக் பயர் வீதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இராவணன் தொடர்பான ஆவணங்கள் இலங்கையினுள் காணப்படுவதாக இராவணன் தொடர்பான ஆய்வாளர் மெரென்டோ அபேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அரநாயக்க, அம்பலன்கந்தேயில் அவ்வாறான சாட்சிகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இவை அனைத்திற்குமான ஆதாரம் பிரித்தானியாவிலுள்ள அருங்காட்சியத்தில் உள்ள ஓலைச்சுவடி ஒன்றில் உள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த ஓலைச்சுவடி இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓலைச்சுவடி என கூறப்படுகின்றது.
பிரித்தானிய தகவல்களுக்கமைய 18ம் நூற்றாண்டில் இலங்கையில் தங்கியிருந்த இயுல் நெவில் என்ற சிவில் அதிகாரியினால் இவ்வாறான பல ஓலைச்சுவடிகள் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஓலைச்சுவடிகளுக்குள் முக்கர ஹட்டன என பிரபல ஓலைச்சுடியும் உள்ளடங்குகின்றன.
இலங்கையின் நீண்ட வரலாறு மற்றும் அபூர்வ தகவல்களின் இரகசியங்கள் உள்ளடங்கிய அந்த ஓலைச்சுவடிகளை மீளவும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஒருவரும் முயற்சிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை மெரென்டோ அபேசேகரவிடம் உள்ள ஓலைச்சுவடியில் இராவணனின் புதையல் மற்றும் ஆயுத களஞ்சிய அறை உள்ள இடம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரக்வான மலைப்பகுதி, ஓமாரகொல்ல மலை, நமுனுகல மலை ஆகிய இடங்களில் அவை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் லண்டனில் உள்ள பிலேக் பயர் அருங்காட்சியகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளில் மறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பிரித்தானியாவில் உள்ள ஓலைச்சுவடிகளை படித்த வெளிநாட்டவர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதற்கும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கும் ஆர்வம் கொண்டுள்ளதாக மெரென்டோ அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையினை தலைமுறை தலைமுறையாக செங்குந்தர்மரபில் வந்த திரு.கந்தையா தர்மகுலசிங்கம் அவர்களின்  இல்லத்திற்கு இன்று (19.07.2017)  புதன்கிழமை காலை8.00 மணிக்கு ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி சென்று ஆலயபிரதான சிவாச்சாரியார் கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் ஆலய மகோற்சவ பத்திரிகையையும் காளாஞ்சியையும் கையளித்தார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்